வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (06:35 IST)

கோயம்பேட்டில் பயணிகள் மீது தடியடி நடத்திய போலீஸார்: காரணம் என்ன?

இன்று தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்ல சென்னை கோயம்பேட்டில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் கூடுதல் கட்டணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி 1 அல்லது 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வருவதால் காலைக்குள் எப்படி ஊருக்கு சென்று வாக்களிப்பது என்றும் பயணிகள் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்
 
இந்த நிலையில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்ட நிலையில் கூடுதல் கட்டணத்தால் செய்வதறியாது போராட்டம் நடத்திய பயணிகள் மீது போலீசார் திடீரென் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
போலீசார் துரத்தி துரத்தி அடித்ததில் பயணிகளில் பலருக்கு காயம் என தகவல் வெளிவந்துள்ளது.  கூடுதல் கட்டணம் குறித்து யாரிடம் புகார் அளிப்பது ? என்று கேட்டதற்கு தடியடி நடத்துகிறார்கள் என்றும் பயணிகள் புகார் கூறினர்
 
பயணிகள் சொந்த ஊர் செல்வதற்காக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக பயணிகள் குவிந்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு மேலும் 250 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது