செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:02 IST)

நான் கொரோனாவை விட மோசமானவன் – பஞ்ச் பேசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதுடன். போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுதீஷ் என்பவர் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுக் கொண்டிருந்ததை கண்ட போலீஸார் அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் போகாமல் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் “நான் கொரோனாவை விட மோசமானவன்” என சினிமாவில் வருவது போல பஞ்ச் வசனங்களை பேசியுள்ளார்.

இதனால் சுதீஷை ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.