செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (07:51 IST)

கொரோனா எப்போது உச்சமாகும்? எப்போது விலகும்? பிரபல ஜோதிடர் கணிப்பு

கொரோனா எப்போது உச்சமாகும்?
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்று வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 2069 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு எதுவரை இருக்கும்? எப்போது உச்சமாகும்? எப்போது விலகும்? என்பது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
 
இதன்படி ஏப்ரல் மாத மத்தியில் கொரோனா உச்சத்திற்கு வரும் என்றும், அதனால் அதிக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் மே மாதத்திலிருந்து படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மே மாத இறுதியில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிடும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் எங்கு ஆரம்பித்ததோ அங்குதான் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் அதாவது சீனாவில் மே மாத மத்தியில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் அதன் பின்னர் இந்த வைரஸ் படிப்படியாக ஒழிக்கப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளார் 
 
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் அதிக நபர்கள் இருந்தாலும் உயிரிழப்புகள் பெரிதாக இருக்காது என்றும் தற்போது ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது