Daily Horoscope

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

Updated: சனி, 25 ஜூலை 2026 (14:58 IST)
மருத்துவர் ராமதாஸால் 1989ம் வருடம் ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வன்னியர் குல மக்களின் பாதுகாவலனாக இந்த கட்சி செயல்பட்டு வந்தது. எனவே வன்னியர்களின் வாக்குகள் இந்த கட்சிக்கு கிடைத்தது.

கடந்த பல வருடங்களாகவே பல தேர்தலிலும் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி பாமக கூட்டணி அமைத்து வந்தது. ஒருமுறை தனியாகவும் தேர்தலை சந்தித்தது. ராமதாஸுக்கு உதவியாக அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே மருத்துவர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். எனவே பாமக இரண்டாகப் பிரிந்தது.. ‘அன்புமணி என் குத்தி விட்டான்.. மார்பில் உதைத்துவிட்டான்.. அவனை நான் மத்திய அமைச்சர் ஆக்கியிருக்ககூடாது’  என்றெல்லாம் பலமுறை ராமதாஸ் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.ஆனால் சில நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தனது மகன் குடும்பத்தினருடன் நேரில் சென்று ராமதாஸை பார்த்தபோது இருவரும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 88 பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, அன்புமணி தனது குடும்பத்துடன் சென்று அவரின் தந்தை ராமதாஸிடம் ஆசி பெற்றனர். அப்போது நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய ராமதாஸ் ‘எனது 88 வது வயதில் அரசியலில் இருந்து விலகுகிறேன்.. அரசியல் துறவறம் என சொன்னால் இன்று முதல் நான் அரசியல் பேசமாட்டேன்.. அரசியலில் தலையிட மாட்டேன்.. இனி அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார்.. என்னை காண வரும் அனைவரையும் நான் சந்திப்பேன்.. ஆனால், என்னிடம் இனிமேல் அரசியல் பேச வேண்டாம்.. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக் கூறியிருக்கிறார், இதையடுத்து பாமகவின் ஒரே தலைமையாக அன்புமணி ராமதாஸ் மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments