செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (13:01 IST)

பைசாவுக்கு மதிக்காதா பாமக... தேமுதிகவிற்கு பெருத்த அவமானம்!

பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை முகப்பு புத்தகத்தில் கூட்டணி கட்சியான தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை. 

 
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்சியாக அந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடித்து 23 தொகுதிகளைப் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் இன்னும் எந்த பெரிய கட்சியும் கூட்டணி தொகுதி உடன்பாடு முடியாத நிலையில் பாமக மட்டும் தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்டு தற்போது அடுத்த கட்டமாக தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணியை தொடங்க உள்ளது.
 
ஆம், சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணொலி காட்சி வாயிலாக பாமகவின் தேர்தல் அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். 
ஆனால், பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை முகப்பு புத்தகத்தில் கூட்டணி கட்சியான தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை. 3 சின்னங்கள் மட்டுமே இடம்பெற்றதால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.