செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (08:30 IST)

சென்றுவா வெற்றி நமதே - விஜயகாந்த் வாய்மொழி விஜய பிரபாகரனுக்கு பலிக்குமா?

சென்றுவா வெற்றி நமதே - விஜயகாந்த் வாய்மொழி விஜய பிரபாகரனுக்கு பலிக்குமா?
தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

 
தேமுதிக தொண்டர்களின் விருப்பத்தின்படி, விருப்ப மனு அளித்துள்ளேன். முதல் முறையாக தேமுதிக தரப்பில் விருப்பமனு அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘சென்றுவா வெற்றி நமதே’ என்று விஜயகாந்த் வாழ்த்தி அனுப்பினார். தமிழகத்தில் எங்க நின்றாலும், தேமுதிக  தொண்டர்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 
 
தேமுதிக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நல்ல முறையில் செயல்படுகின்றனர். தேமுதிக தலைவர் மற்றும் பொருளாளர் எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் அங்கு நிற்க நான் தயார். கூட்டணி தொடர்பாக அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.