சட்டமன்ற தேர்தல்… தொண்டர்களை உற்சாகப்படுத்த வருவாரா விஜயகாந்த்?

Last Updated: வியாழன், 4 மார்ச் 2021 (15:41 IST)

தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக, பாமக உள்ளிட்டவற்றுடன் கூட்டணிக்கு பேசி வரும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக தொண்டர்களும் மனதளவில் மிகவும் சோர்ந்து போயுள்ள நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தவும், தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவும் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என சொல்லப்படுகிறது. அதற்காக இப்போது இருந்தே தயாராகி வருகிறாராம் விஜயகாந்த். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்கப் மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :