அண்ணாமலை மாமா !!! குரல் கொடுத்த மழலை: ஓடி வந்து குழந்தையை தூக்கிய அண்ணாமலை
பாரதப் பிரதமரின் சாலை காட்சி கோவையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி சாலையில் இரு புறங்களில் உள்ள மக்களை பார்த்து கைகளை அசைத்துக் கொண்டு சென்றார். இந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடந்து செல்லும் போது, ஒரு சிறுமி அண்ணாமலை மாமா என அழைத்தது.
இதனைக் கேட்ட அண்ணாமலை ஓடி வந்து அந்த சிறுமியை தூக்கி பேசினார்.
அப்போது அச்சிறுமி மானாமதுரையை சேர்ந்த சன்மதி என அருகில் இருந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.
மோடியை பார்த்தீர்களா என அண்ணாமலை கேட்க, பார்த்ததாக அச்சிறுமி சொன்னாள்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.