திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (15:17 IST)

தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதம் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்..!

தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்காது என்று கூறப்படுவதை என்னால் ஏற்க முடியாது என்றும் பாஜக வட மாநிலங்களில் வலுவாக இருந்தாலும் தென் மாநிலங்களில் அந்த கட்சி வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்

குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது என்றும் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று என் தன்னால் சரியாக கணிக்க முடியவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக சில வெற்றிகள் கிடைக்கும் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பாஜக நோட்டாவை தாண்ட முடியாது என்று கிண்டல் செய்து வருவது சரியல்ல என்றும் தமிழகத்துக்கு அடிக்கடி பிரதமர் வருவது நிச்சயம் அந்த கட்சிக்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்

அதேபோல் கேரளா கர்நாடகம் தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ஒரளவு பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் அவர் என்று அவர் தெரிவித்தார்.


Edited by Mahendran