திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:31 IST)

பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

modi brother
பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி..!
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாகவும் விரைவில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறி உள்ளன.
 
Edited by Siva