மீண்டும் ஒரு பிளஸ் 2 மாணவர் தற்கொலை: கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு கிருஷ்ணகிரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
முதல்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது தாத்தா மரணம் அடைந்ததாகவும் அதனால் மன விரக்தியில் இருந்த மாணவர் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் அப்போது சக மாணவர்கள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது
பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.