வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (12:30 IST)

இவ்ளோ வருஷமாச்சு.. கல்யாணமே ஆகல..! – விரக்தியில் தமிழ் ஆசிரியர் தற்கொலை!

நீலகிரியில் திருமணமாகாத விரக்தியில் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலமூலாவில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் காளீஸ்வரன். இவர் சிவகங்கை மாவட்டம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர்.

வயது 55 ஆகியும் காளீஸ்வரனுக்கு திருமணமாகாத நிலையில் தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காளீஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் காளீஸ்வரன் வீட்டில் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.