1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:15 IST)

அதிகரிக்கும் பிளாஸ்மா தானம்: விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல். 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானத்தை வழங்கினர். 
 
இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானத்தை வழங்கியதாக தெரிவித்த அமைச்சர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 20 நாட்களில் 76 நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்தார்.