1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:36 IST)

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் உறவினரா தமிழ் நடிகை? ஆச்சரிய தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்தது. கமலா ஹாரீஸ் அவர்களின் தாயார் சென்னையை சேர்ந்தவர் என்றும் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது நெருங்கிய உறவினர் என்று எனக்கு தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்கள் ஒரு சிலவற்றில் நடித்தாலும் நடிகை லட்சுமிபிரியா என்பவர் ‘லட்சுமி’ என்ற குறும்படத்தில் தான் புகழ் பெற்றார். இந்த குறும்படம் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் உறவினரா தமிழ் நடிகை?
இந்த நிலையில் நடிகை லட்சுமி பிரியா தனது டுவிட்டரில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களின் தாத்தாவும் எனது கொள்ளுத் தாத்தாவும் நெருங்கிய உறவினர்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள் தனக்கும் நெருங்கிய உறவினர் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது