வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (20:54 IST)

பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லை.. ரூ.35,025 அபராதம் விதித்த நுகர்வோர் கோர்ட்..!

ஆர்டர் செய்த பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லை என்பதற்காக நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,025 ஹோட்டல் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு ஊறுகாய் விலையுடன் சேர்த்து ரூ.35,025  நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி என்பவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமுருகன் ஹோட்டலில் பார்சல் சாப்பாடு வாங்கினார். அந்த சாப்பாட்டில் சாம்பார், ரசம், காரக்குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாம் இருந்தது, ஆனால் ஊறுகாய் இல்லை என்று பாலமுருகன் குற்றம் சாட்டினார்.

பார்சலில் ஊறுகாய் இல்லாததால் ஹோட்டலில் சென்று அதற்கான பணத்தை திருப்பி கேட்கும் போது நிர்வாகம் தர மறுத்தது. இதனை அடுத்து அவர் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கின் தீர்ப்பில் மன உளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவுக்கு ரூ.5000 ஊறுகாய் இழப்பீடாக ரூ25 என மொத்தம் ரூ.35,025 வழங்க நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva