1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (17:21 IST)

பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரிய வழக்கறிஞர்: அபராதம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி..!

Madurai Court
பாலியல் தொழில் நடத்த அனுமதி வேண்டும் என்றும் அந்த தொழிலுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞரின் சான்றிதழை சரி பார்க்கவும் உத்தரவிட்டு உள்ளார். 
 
நாகர்கோவிலை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் எண்ணெய் குளியல் சேவை என்ற பெயரில் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது பாலியல் தொழிலாளர்களை கொண்டு விரும்பும் நபர்களுக்கு சேவை செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் ராஜமுருகன் கோரிக்கை விடுத்தார் 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி மனுவை தள்ளுபடி செய்ததோடு 20,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞரின் சான்றிதழை பார் கவுன்சில் சரி பார்க்க வேண்டும் என்றும் அவருடைய கல்வி சான்றிதழ் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran