1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (12:15 IST)

எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. தப்பி ஓடிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

Bomb
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மாயமாகிவிட்ட நிலையில் அவர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று காலை திடீரென ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய நிலையில் அந்த பகுதியில் உள்ளோர் அச்சம் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து தடயவியல்  நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு வெளியே வந்து காவலர்கள் பார்த்தபோது வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தனிப்படை அமைத்து அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த ஊரில் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran