ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (06:52 IST)

சென்னையில் 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!

கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியும் வந்து கொண்டிருந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது என்பதும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளானார்கள் என்பதையும் பார்த்து வந்தோம் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தும் ஒரே விலையிலும் இருப்பதை அடுத்து, சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது
 
கடந்த 15 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நூத்தி ரூ.102.49 என்ற விலையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.39 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது