சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
ஏற்கனவே 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று 26 வது நாளிலும் மாற்றமில்லாமல் உள்ளது என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.