செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (06:55 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

சென்னையில் கடந்த 17 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே விலையில் அல்லது வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது