வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:16 IST)

அகில இந்திய மக்கள் கட்சி (AIMK) கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய மக்கள் கட்சி (AIMK) கட்சி சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிறுவனத்தலைவர் எம்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பூங்கொடி, ராஜன் உள்ளிட்ட 4 பேர் கலந்து கொண்டதில் பூங்கொடி என்கின்ற பெண்மணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்டார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அந்த பெண்மணிக்கும் அவருடன் சேர்ந்த 4 பேருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில், பெண்மணி என்று பாராமல் அவரை திட்டி அனுப்பி வெளியே போ என்று   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தெரிகிறது.

அங்கிருந்த காவல்துறையினர் அந்த பெண்மணி மற்றும் அந்த 4 நபர்களை காப்பாற்றி வெளி கொண்டு வந்தது. பெண் என்றும் பாராமல் பட்டியல் சமூகத்தினை சார்ந்த பூங்கொடியை தாக்கிய சம்பவம் தமிழக அளவில் பெரும் கண்டனத்தினை ஏற்படுத்திய நிலையில், பெண் பூங்கொடியை கொலைமுயற்சி செய்ய நினைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய கோரியும், அந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட அந்த 4 நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டி தலித் மற்றும் அருந்ததியினர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அகில இந்திய மக்கள் கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் எம்.காமராஜ் தலைமையில் கொடுத்தனர். மேலும், மனு கொடுத்து விட்டு வெளியே வந்த அகில இந்திய மக்கள் கட்சி நிர்வாகிகள் அந்த கட்சியின் நிறுவனத்தலைவர் எம்.காமராஜ் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி திடீரென்று ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.