தனுஷ் பட டைட்டில் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (19:24 IST)


தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்
உருவாகவுள்ள ஆயிரத்தில் ஒருவர் 2 பாகத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.


செல்வராகவன் 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை இயக்கவுள்ளார்.
இது அவருக்கு 12 வது படமாகும்.

இந்நிலையில், செல்வராகவன் அடுத்து எப்போது படம் எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது,
அவர் தனது தம்பியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்ததுதான் தாமதம் இந்தியா முழுவதும் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது. இந்நிலையில் செல்வராகவன் இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

அதேபோல் தற்போது செலவராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நாளை மாலை தனுஷ் நடிப்பில் தனது இயக்கத்தில் உருவாகவுள்ள 12 வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :