செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:20 IST)

தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி மனு..

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணிக்கை வருகிற ஜனவரி 02 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.