திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (21:03 IST)

இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடு- அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் வெளியிட்டு, செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வீடு இல்லாத 7 குடும்பங்களுக்கு, சென்னை மூலக்கொத்தளம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் புதிய வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

"எல்லோருக்கும் எல்லாம்" என்ற கொள்கை வழியில் இயங்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, சரியான இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடு என்ற அவர்களின் கனவைத் தொடர்ந்து நனவாக்கி வருகிறது.

அந்த வகையில், நம்மிடம் கோரிக்கை மனு அளித்திருந்த சென்னை மயிலாப்பூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு, சென்னை மூலக்கொத்தளம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் புதிய வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளை இன்று வழங்கினோம். அவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே, கழக அரசின் நல்லாட்சிக்கு சாட்சி. புது வீடுகளை பெற்றுள்ள அக்குடும்பத்தாருக்கு என் அன்பும், வாழ்த்தும்''என்று தெரிவித்துள்ளார்.