திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (19:35 IST)

வரும் 19 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi
பிரதமர் மோடி 2 வது முறையாக தமிழ்நாடு வருகிறார் எனத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ் நாடு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி விமான நிலையம் 1100 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள அந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார். அதனை அடுத்து சேலம் - மேட்டூர் இடையேஎ 41 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர்,   திருச்சி விருதுநகர்,  விருதுநகர் தென்காசி, செங்கோட்டை திருச்செந்தூர் மின்மயமாக்க ரயில் பாதையை தொடங்கி வைத்ததுடன்,   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணர்கள் மத்தியில் பேசினார்.

 இந்த நிலையில் பிரதமர் மோடி 2 வது முறையாக தமிழ்நாடு வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில்,  இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதுடன்,  திருப்பூரில் நடைபெறவுள்ள  பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வரும்  ஜனவரி 19 ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.