1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:39 IST)

ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் விளக்கம்

ரூபாய் 100 கோடியில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். கொரனோ வைரஸ் பாதிப்பு காலத்தில் ஒரு சிலை வைக்க நூறு கோடி செலவு செய்வது அவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். பெரியார் உலகம் என்பது பெரியார் சிலை மட்டும் அல்ல என்றும், 95 உடைய அடி உயர பெரியார் சிலை, ஒலி மற்றும் ஒளி அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா, உணவகம் ஆகிய பல அம்சங்கள் இதில் அமைய உள்ளது என்பதும் இதன் அத்தனையும் சேர்ந்த மதிப்புதான் ரூபாய் 100 கோடி என்றும் விளக்கப்பட்டுள்ளன
 
100 கோடி செலவில் பெரியார் சிலை மட்டும் அமைக்கப்படுவதாக பரவும் தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது