1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:19 IST)

இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு: கமல்ஹாசன்

பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாள் என்று அறிவித்தது பாஜக தவிர அனைத்து கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் பாஜக தலைவரான அண்ணாமலை மட்டும் வ.உ.சி, பாரதியார் ஆகியோர்களை மறந்துவிட்டு பெரியாரை மற்றும் போற்றுதல் சரியா என்ற கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கமல்ஹாசன் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல்.