1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (18:03 IST)

சேதம் செய்யப்பட்ட பெரியார் சிலை சீரமைப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே சேதம் அடைந்த பெரியார் சிலை சீரமைக்கப்பட்டது.  

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்தது. இத்னால் காவல் துறையினர் சிலையை துணியால் மறைத்தனர்.
 
இந்நிலையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் போலீசில் சரண் அடைந்தார். சரணடைந்த செல்லக்கிளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே சேதம் அடைந்த பெரியார் சிலை சீரமைக்கப்பட்டது.  சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.