வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (09:00 IST)

ஊர்தியில் ஊதாரி... சமூக வலைத்தளத்தில் பெரியாருக்கு எதிர்ப்பு!

பெரியாரின் சிலை குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியில் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாகும். 
 
கொடியேற்றத்தை தொடர்ந்து மத்திய அரசால் நிகாரரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தியின் அணிவகுப்பு சென்னை நடைபெற்று வருகிறது. இந்த ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகள் இடம்பெற்றுள்ளது. 
மேலும் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் சுதேசி கப்பலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் கொண்ட ஊர்தியும் அணிவகுக்கப்பட்டுகிறது. 
 
இதனிடையே பெரியாரின் சிலை அணிவகுப்பு ஊர்தியில் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் வெளிபாடாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் அவ்வப்போது பெரியார் சிலையை சேதப்படுத்துவது காவி பூசுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறும் நிலையில் இந்த நிகழ்வு புதிதொன்றும் அல்ல.