1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (11:26 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்.. பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Kilambakkam
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திடீரென பொதுமக்கள் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்படும் என்றும் அங்கிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில்  சர்வீஸ் சாலை வழியாக கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமம் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 
பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக செல்வதால் பொதுமக்கள் தங்களது தேவைக்கு அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகளை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிறை பிரித்து திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக போராட்டக்காரர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran