1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (20:52 IST)

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது- பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி

PETROL
லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழ் நாட்டில் தட்டுப்பாடு வராது என பெட்ரோல், டீசல் வி நியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி உறுதியளித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய மூன்று குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  

இதற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்த மசோதாக்கள் சட்டமானது.

இந்த மசோதாக்களில், கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் செல்லும் அல்லது அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் செல்லும் ஓட்டுநர்களின் வழக்குகளில் ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மும்பை, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுனர்கள் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கிமீ அணிவகுத்து வாகனங்கள் நிற்கின்றன.

இதனால், மத்திய பிரதேச நடுவழியில், தமிழ்நாடு ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் தட்டுப்பாடு வராது என பெட்ரோல், டீசல் வி நியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி உறுதியளித்துள்ளார்.

தமிழ் நாட்டிற்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல்  வி  நியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.