1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:24 IST)

பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்: அறிவிப்பு பலகை..!

Kilambakkam
பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் உட்பட கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவு செய்த அனைவரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்கிருந்துதான் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகள் முன்பதிவு செய்யாத பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்று கோயம்பேடு பேருந்து நிலைய நிர்வாகம் அறிவிப்பு பலகை ஒன்றை அமைத்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும் என்றும்  எனவே பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு வழக்க வைக்கப்பட்டுள்ளது.  

எனவே கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லாமல் தென் மாவட்டம் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva