1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (11:17 IST)

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி! என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சந்தித்து நீட் தேர்வு குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் நாளை மீண்டும் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
 
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி  தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுக்கான அழைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் மோடியை நாளை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருக்கிறார். 
 
இதற்காக அவர் இன்று டெல்லி பயணம் செய்வதாகவும் நாளை பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran