1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pazhani mobile shop owner attack platform seller

’எவ்ளோ திமிர் இருந்த கம்மி ரேட்டுக்கு கவர் விப்ப?’- கடைக்காரரை தாக்கிய நபர்!

Pazhani
பழனியில் குறைந்த விலைக்கு மொபைல் கவர் விற்றவரை மற்றொரு கடைக்காரர் தாக்கி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் சுந்தர்சன் என்ற நபர் கடைவீதியில் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் மதுரையை சேர்ந்த ராஜன் என்பவர் வறுமை காரணமாக ப்ளாட்பாரத்தில் நின்று செல்போன் கவர்கள், ஹெட்செட் போன்றவற்றை விற்று வந்துள்ளார்.

சுந்தர்சனின் கடையில் உள்ள பொருட்களை விட ராஜனிடம் குறைவான விலையில் மொபைல் கவர்கள் கிடைத்ததால் பலரும் ராஜனிடம் பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது. ராஜனால் தனது வியாபாரம் நஷ்டமடைவதாக ஆத்திரமடைந்த சுந்தர்சன், ராஜனை தாக்கி அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுந்தர்சனை கைது செய்துள்ளனர். வறுமையால் கவர் விற்கும் ப்ளாட்பார்ம் கடைக்காரரை சுந்தர்சன் தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: முக்கிய அறிவிப்பு!