ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2024 (09:24 IST)

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

Patta Website

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ‘தமிழ்நிலம்’ வலைதளம் அடுத்த நான்கு நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான தமிழ்நிலம் மென்பொருளில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

 

எனவே இன்று 28ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்களுக்கு இணைய வழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் (https://tamilnilam.tn.gov.in/Revenue/) மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html ஆகிய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K