வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (09:58 IST)

பராமரிப்பு பணி எதிரொலி..! நாளை 44 ரயில்கள் ரத்து.! எங்கு தெரியுமா..?

Chennai electric train
பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
 
இதனால் சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (17-ம் தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
ரயில்கள் ரத்து விவரம்:
 
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
இதேபோல் மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
சிறப்பு ரயில்கள் இயக்கம்:
 
பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம்12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகளைக் கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.