Daily Horoscope
✕

பகுதி நேர பொறியியல் படிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

Written By Siva
Updated: புதன், 28 ஜூன் 2023 (11:55 IST)
பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு அரசு கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நான்காண்டு பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
 
https:www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே பகுதி நேர படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய் வீடு அருகே அனாதையாக இருந்த பச்சிளங்குழந்தை.. முன்னாள் விமான பணிப்பெண்ணிடம் விசாரணை...

TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்.. தமிழக அரசு ஏற்பாடு...

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை.. ஆயத்த பணிகளில் த்வெக அரசு தீவிரம்...

வி.எஸ். பாபு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா? அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

இனி Claude செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் வங்கி கணக்குகளையும் இணைக்கலாம்.. பணம் அனுப்ப முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments