மீண்டும் ஒரு ஊராட்சி தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி… ராஜினாமா செய்ய போவதாக அறிவிப்பு!
தமிழகத்தில் ஊராட்சி தலைவர்கள் சாதி ரீதியாக நெருக்கடிக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தலித் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜேஸ்வரி பாண்டி என்பவருக்கு மற்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என சொல்லப்படுகிறது.
நடைபெறும் கூட்டங்களுக்கு ராஜேஸ்வரியை அழைப்பதில்லை என்றும் அவராகவே வந்தால் வந்தால் மற்றவர்கள் வெளியேறி விடுகிறார்கள் என்றும் காசோலை புத்தகத்தை துணை தலைவரே வைத்துக் கொள்கிறார் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும் மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை எனக் கூறி இன்று பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.