ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (20:48 IST)

அதிமுகவை கைப்பற்றுவதே எங்களின் முக்கிய இலக்கு: டிடிவி தினகரன்

அதிமுகவை கைப்பற்றுவதே எங்களின் முக்கிய இலக்கு என அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் ஆடியோவை வெளியிட்டு அதிமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் டெல்லி சென்ற ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி அளித்தபோது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே இலக்கு என்றும் எங்கள் முயற்சியும் சசிகலா முயற்சியும் அதுதான் என்றும் கூறினார் 
 
தேர்தலில் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து வருகிறோம் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது