திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (12:32 IST)

அதிமுக வங்கி கணக்குகளை முடக்குங்க… ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ்!

அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 


அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் தனது தரப்பில் இருந்து ஈபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.  கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.