Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினின் கடித்தை எதிர்த்து கர்நாடக முதல்வர் பேச்சு... கண்டித்த ஓபிஎஸ்!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 8 ஜூலை 2021 (10:51 IST)
மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் கூறியது கண்டிக்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

 
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார். 
 
இந்நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது கர்நாடகாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக முதல்வர் எடியூரப்பா “அணை கட்டும் பணியை இணக்கமாக நடத்தவே தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அணை விவகாரத்தில் சட்டமும் சாதகமாகவே உள்ளது என கூறியுள்ளார்.
 
இதனிடையே, மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் கூறியது கண்டிக்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேகதாது அணை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments