வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (10:28 IST)

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் ஓபிஎஸ் – தனிவிமானத்தில் டெல்லி பயணம் !

முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் துணை முதல்வர் ஓபிஎஸ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று வரை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்ட துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை தனிவிமானத்தில் டெல்லிப் பயனம் சென்றுள்ளார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் ‘ ஓபிஎஸ் சில வருடங்களாகவே கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆயூர்வேத சிகிச்சைகளை எடுத்து வந்தார். இதற்கான மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். அதற்காகத்தான் இப்போது டெல்லி சென்றுள்ளார்’ எனக் கூறுகின்றனர்.