வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (20:14 IST)

ஜூலை 21ம் தேதி மின்சார ரெயில் சேவைகள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

வரும் ஜூலை 21 ஆம் தேதி அன்று, பராமரிப்பு காரணமாக சில ரயில்களை ரத்து செய்யவுள்ளதாக ரெயில்வே  நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள அறிக்கையில் :
 
வரும் ஜூலை 21 ஆம் தேதி, பராபரிமரிப்பு காரணமாக சில மின்சார ரயில்கல் ரத்து செய்யப்படுகின்றன.
 
அதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. முக்கியமாக காலை 7. 50 மணி முதல், மதியம் 1. 50 மணிவரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படவும் என்றும், பின்னர் மதியம் 2 மணி முதல் இவ்வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும்  கூறப்பட்டுள்ளது.
 
மேலும்   சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படும். அதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்தப் பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர்.அந்த நேரத்தில் கூடிதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.