வெளிநாடு செல்கிறாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (07:00 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது முடிவடைந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த துணை முதல்வர், கூடிய விரைவில் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வெளிநாடு செல்வதற்கு உண்டான பணிகளை கவனிக்க அவர் நேற்று டெல்லி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் வெளிநாடு செல்லும் தகவலை அவரது தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை
ஓபிஎஸ் அவர்கள் வெளிநாடு செல்வது உறுதி செய்யப்பட்டால் வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் அவர்கள் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :