1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:43 IST)

ரூ.30க்கு திடீரென இறங்கிய வெங்காயம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ரூபாய் 100 வரை இருந்ததால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
வெங்காயத்தை பதுக்கி வைத்ததன் காரணமாகவும் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு டன் கணக்கில் வெங்காயம் அழுகி விட்டதன் காரணமாகவும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்டது 
 
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டலும், அந்த வெங்காயம் ருசி இல்லை என்பதால் வெங்காயத்தின் விலை கணிசமாக ஏறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது திடீரென கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிலோ ஒரு ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூபாய் 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் வரத்து இருந்ததால் வெங்காயம் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது 
 
அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கி இருப்பதாகவும் இந்த வெங்காயம் கிலோ 40 முதல் 45 வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மொத்தத்தில் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது தீபாவளி நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது