புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:04 IST)

ஓஎன்ஜிசி கால நீட்டிப்பு கோரிக்கை! – அனுமதியளிக்குமா தமிழக அரசு!

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஓஎன்ஜிசி ஒப்பந்த காலம் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க கூடாது என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது. ஆனால் காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசியின் பணிகள் ஒப்பந்த காலம் வரை தொடரும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஓஎன்ஜிசி ஒப்பந்த காலம் விரைவில் முடிய உள்ளது. தற்போது மத்திய சுற்றுசூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீடு குழு தமிழக அரசிற்கு பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதில் காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.