1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (11:35 IST)

களத்தில் குதித்த மாதர் சங்கம்: பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் ஒரு வழக்கு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு , சபரிராஜன் , வசந்தகுமார் , சதீஷ்குமார் உள்பட கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 4 பிரிவுகளுடன் தற்போது கூடுதலாக ஒரு வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்த வழக்கு சம்மந்தமாக 4 வீடியோக்களை சிபிஐய்யிடம் சமர்ப்பித்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதனை பெண் அதிகாரி விசாரிக்க வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.