வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (08:13 IST)

சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசு வேலை, ரூ.1 கோடி நஷ்ட ஈடு: திருமாவளன்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுகவினர் வைத்த பேனர் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுபஸ்ரீயின்ன் தந்தை ரவி, தாயார் கீதா ஆகியோரை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
 
சுபஸ்ரீ பெற்றோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘ஒரே மகளை இழந்து தவிக்கும் சுபஸ்ரீயின்ன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். சுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் தமிழக அரசுக்கு வைக்கின்றேன்.
 
 
பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் இருந்து ஒரு ஆறுதல் கூட கிடைக்காதது வருத்தத்திற்குரியது. பேனர் விழுந்து விபத்து ஏற்படவில்லை என ஆளும் கட்சியினர் கூறுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல உள்ளது. பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வந்தால் தான் காவல்துறையினர் அதை வழிநடத்த முடியும்’ என்று கூறினார்.
 
 
ஏற்கனவே சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அரசு வேலையும் ரூ.1 கோடி நஷ்ட ஈடும் தமிழக அரசு வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்