#ஓசி ஆட்டோ திமுக ... டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் ! வைரல் வீடியோ
திமுகவின் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ளYMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ,ஆட்டோவில் வந்த மூன்று திமுகவினர், ஆட்டோ ஓட்டுநரிடம் உரிய பணத்தை தர வில்லை என தெரிகிறது.
இதனால் மனம் வருந்திய ஆட்டோ ஓட்டுநர் இதுகுறித்து சிலரிடம் தெரிவித்துள்ளார். அனாலும் தனக்கான பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார். இன்று, மதியம் சாப்பாட்டுக்கும் பணம் இன்றி பட்டிணி கிடைந்துள்ளார்.
இதைப்பார்த்த ஒருவர் ஆட்டொ டிரைவர் குட்டி சொல்வதை வீடியோ எடுத்து சமூக வளைததளதில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இது வைரலாகி வருகி்றது.
இந்த வீடியோவை பதிவிட்டு, ''திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை YMCAயில் இன்று நடைபெறும் நிலையில்,ஆட்டோவில் வந்த மூன்று திமுகவினர் பணம் தரமல் சென்றுவிட்டனர்.பசிக்குது சாப்பாடிற்கு காசு இல்லை என்று புலம்பும் ஆட்டோ டிரைவர் குட்டி #ஓசிஆட்டோதிமுக @AIADMKOfficial @arivalayam'' என குறிப்பிட்டுள்ளனர்.