ஞாயிறுகளில் காலை 6 மணிக்கு மெட்ரோ..

Arun Prasath| Last Modified சனி, 9 நவம்பர் 2019 (18:39 IST)
ஞாயிற்றுகிழமை மட்டும் மெட்ரோ  ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் மின்சார ரயில்கள் போல மெட்ரோ ரயிலும் சென்னை மக்களின் அங்கமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :